கிரிக்கெட்

2019ஆம் ஆண்டின் ஐசிசி விருதுக்கு விராட் கோலி- ரோகித் சர்மா தேர்வு + "||" + ICC Awards: Rohit Sharma ODI Cricketer of 2019, Virat Kohli walks away with Spirit of Cricket award

2019ஆம் ஆண்டின் ஐசிசி விருதுக்கு விராட் கோலி- ரோகித் சர்மா தேர்வு

2019ஆம் ஆண்டின் ஐசிசி விருதுக்கு விராட் கோலி- ரோகித் சர்மா  தேர்வு
2019ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கும், சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருது இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
துபாய்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அ ஒருநாள் கனவு அணி, டெஸ்ட் கனவு அணி மற்றும் வீர்ரகளை அறிவித்து உள்ளது. ஒரு ஆண்டில் மிகச்சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஐசிசி கனவு அணி அறிவிக்கப்படுகிறது.  முன்னாள் வீரர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஐசிசி வோட்டிங் அகடமியால் கனவு அணி தேர்வு செய்யப்படுகிறது. 

* 2019ம் ஆண்டிற்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரருக்கான விருது ரோகித் சர்மாவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாள் போட்டியில் இந்த ஆண்டு ரோகித் சர்மா 7 சதங்கள் அடித்து உள்ளார்.

* 2019ம் ஆண்டிற்கான 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது..

 * ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் தனது 59  டெஸ்ட் விக்கெட்டுகளுக்கு  2019 ஆம் ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார்.

* இந்த ஆண்டின்  சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியுடன் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு மிகப்பெரிய ஐ.சி.சி பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

* 2019- ஆம் ஆண்டின் மிகச்சிறந்த நடுவராக ரிச்சர்ட் இல்லிங் வொர்த்  (இங்கிலாந்து) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 * சிறந்த இணை வீரராக கைல் கோட்ஸர் (ஸ்காட்லாந்து)

* ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட்: வீரர் மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

*  ஆண்டின் 2 ஓவர் போட்டியில் சிறந்த  செயல்திறன்: தீபக் சாஹர் ( இந்தியா) 

ஐசிசியின் கனவு டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: மயங்க் அகர்வால் (இந்தியா), டாம் லாதம் (நியூசிலாந்து), மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), பிஜே வாட்லிங் (நியூசிலாந்து), பேட்ரிக் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா ), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), நீல் வாக்னர் (நியூசிலாந்து), நாதன் லியோன் (ஆஸ்திரேலியா)

ஐசிசி கனவு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் :ரோகித் சர்மா (இந்தியா), ஷாய் ஹோப் (மேற்கிந்திய தீவுகள்), விராட் கோலி (சஇந்தியா), பாபர் அசாம் (பாகிஸ்தான்), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா ), ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து), முகமது ஷமி (இந்தியா), குல்தீப் யாதவ் (இந்தியா)

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி; சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: தொடரையும் வென்றது
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியின் சூப்பர் ஓவரில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. 3வது 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது.
3. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
4. "பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர்
பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வங்காளதேச வீரரின் ட்விட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5. சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல்
சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது என சோயப் அக்தர் கிண்டல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.