தேசிய செய்திகள்

ராகுல்காந்தி பொங்கல் வாழ்த்து + "||" + Wishing you all a very happy Pongal Ragul gandhi

ராகுல்காந்தி பொங்கல் வாழ்த்து

ராகுல்காந்தி பொங்கல் வாழ்த்து
தமிழக மக்களுக்கு ராகுல்காந்தி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களையும் காக்கும் இயற்கையை வணங்கும் பொருட்டு தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மத, பேதமின்றி மக்கள் பொங்கல் திருநாள் வாழத்துகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூறி வருகின்றனர். வீட்டு வாசலில் தோரணம் கட்டி, வண்ண வண்ண கோலமிட்டு உற்சாகமாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பொங்கலைக் கொண்டாடும் தமிழக மக்களுக்கு தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...