மாநில செய்திகள்

கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - கே.எஸ்.அழகிரி + "||" + The coalition and the local election concept have nothing to do with it SAzhagiri

கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - கே.எஸ்.அழகிரி

கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - கே.எஸ்.அழகிரி
கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தி.மு.க., காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது.  சில தினங்களுக்கு முன் தி.மு.க.,வை விமர்சித்து தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அது தி.மு.க.,வினரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சோனியாவை டெல்லியில் சந்தித்த பின்னர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், தி.மு.க., உடன் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றார்.

இதனிடையே கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு கூறியதாகவும், ஆனால் தாம் பதிலையே கூறிவிட்டதாகவும் துரைமுருகன் கூறினார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது கூட ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். எனது கருத்தால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது, கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் கருத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அறிக்கை வெளியிட்டது முடிந்துபோன விஷயம்: தி.மு.க.வுடன் நட்பு தொடருகிறது; கே.எஸ்.அழகிரி பேட்டி
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தி.மு.க. வழங்காதது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என்று வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை முடிந்துபோன விஷயம் என்றும், தி.மு.க.வுடன் நட்பு தொடருகிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
3. உள்ளாட்சி தேர்தலை நேரடியாக நடத்த தைரியம் உள்ளதா? எடப்பாடி பழனிசாமிக்கு, கே.எஸ்.அழகிரி சவால்
உள்ளாட்சி தேர்தலை நேரடியாக நடத்த தைரியம் உள்ளதா? என எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.
4. எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது கே.எஸ்.அழகிரி பேட்டி
எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது என கே.எஸ்.அழகிரி கூறினார்.
5. மராட்டிய கவர்னரின் தவறான போக்கை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது கே.எஸ்.அழகிரி பேட்டி
மராட்டிய கவர்னரின் தவறான போக்கை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது என்று ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி கூறினார்.