மாநில செய்திகள்

சொந்த கிராமத்தில் உறவினர்களோடு பொங்கல் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி + "||" + With relatives in the native village Palanisamy was the first to celebrate Pongal

சொந்த கிராமத்தில் உறவினர்களோடு பொங்கல் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி

சொந்த கிராமத்தில் உறவினர்களோடு பொங்கல் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த கிராமத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
சேலம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று சேலம் சென்றார். தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் இன்று தனது உறவினர்களோடு பொங்கல் விழாவை கொண்டாடினார். குலதெய்வ கோயிலுக்கு சென்று குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், அங்கு பொங்கல் வைத்தார். இதில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறியடி நிகழ்ச்சியிலும் உற்சாகமாக பங்கேற்றார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்ட தரண் புற்று நோய் மருத்துவமனையை முதலமைச்சர் பார்வையிட்டார். அதன்பின்னர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. காந்தியின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா ஆலோசனை கூட்டம் : டெல்லிக்கு சென்றார் முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
2. சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
3. தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது: மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது என்றும், மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றும் கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. வழக்கு - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. 17 பேர் பலியான விவகாரம்: மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 பேர் பலியான விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.