தேசிய செய்திகள்

இந்தியாவில் சிறு -நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் ரூ.7089 கோடி முதலீடு + "||" + Amazon to invest $1 billion to digitise small and medium businesses in India

இந்தியாவில் சிறு -நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் ரூ.7089 கோடி முதலீடு

இந்தியாவில் சிறு -நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் ரூ.7089 கோடி முதலீடு
இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் 100 கோடி டாலரை (இந்திய மதிப்பில் ரூ. 7088.90 கோடி)முதலீடு செய்ய உள்ளது.
புதுடெல்லி

உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரும், முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானின் சி.இ.ஓவுமான ஜெப் பெசோஸ்  , 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி ராஜ்காட் சென்ற அவர், அங்குள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உலகத்தின் போக்கையே மாற்றிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியது, சிறப்பான தருணமாக இருந்ததாகவும் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  ஜெப் பேசும் போது கூறியதாவது:-

21 ஆம் நூற்றாண்டு இந்திய நூற்றாண்டாக இருக்கும் என்று நான் கணித்துள்ளேன். 2025 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் ( ரூ.70880 கோடி) மதிப்புள்ள 'மேக் இன் இந்தியா' பொருட்களை ஏற்றுமதி செய்ய அமேசான் தனது உலகளாவிய  தளங்களை பயன்படுத்தும். இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம்  100 கோடி டாலரை(இந்திய மதிப்பில்  ரூ. 7088.90கோடி) முதலீடு செய்ய உள்ளது. 

சுறுசுறுப்பு, ஆற்றல் ... வளர்ச்சி. இந்த நாட்டில் ஏதோ ஒரு சிறப்பு உள்ளது, அது தான்  ஜனநாயகம் என கூறினார்.

அமேசான் இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர்( சுமார் ரூ. 3044 கோடி ) முதலீடுகளைச் செய்துள்ளது, மேலும் நாட்டை ஒரு முக்கிய வளர்ச்சி சந்தையாக பார்க்கிறது.