சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு? + "||" + Visa for actor Rajinikanth Sri Lankan government denial?

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?
யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கொழும்பு

இலங்கை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். அப்போது, இலங்கைக்கு வருமாறு, ரஜினிகாந்துக்கு அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் மூலம், இந்த தகவல் உறுதியாகி உள்ளது. அரசியல் நடவடிக்கைக்காகவே அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்கப்படமாட்டாது என, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
திமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை - நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியீடு
எஸ்.பி பால சுப்பிரமணியம் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
3. ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு: கவிஞர் வைரமுத்து வாழ்த்து
ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு செய்வதையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்
லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.