உலக செய்திகள்

ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் திடீர் ராஜினாமா + "||" + Russian government resigns after Vladimir Putin plans sweeping constitutional changes

ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் திடீர் ராஜினாமா

ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் திடீர் ராஜினாமா
ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் புதினிடம் அளித்தார்.
மாஸ்கோ,

ரஷ்ய பிரதமர்  டிமிட்ரி மெத்வடேவ்  தனது பிரதமர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அதிபர் புதினிடம் அவர் வழங்கினார். 

பிரதமராக மெத்வதேவ் ஆற்றிய பணியை பாராட்டி, நன்றி தெரிவித்த அதிபர் புதின், மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அதிபர் பாதுகாப்பு கவுன்சிலில், மெத்வதேவை அதிகாரியாக நியமிக்க புதின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய பிரதமர்  டிமிட்ரி மெத்வடேவ்வின் ராஜினாமா குறித்த காரணங்கள் வேறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆசிரியரின் தேர்வுகள்...