மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள் வழங்கி அசத்தல்! + "||" + Jallikattu Winners will be awarded prizes ranging from cooker to car

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள் வழங்கி அசத்தல்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள் வழங்கி அசத்தல்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகளாக வழங்கப்பட்டன.
மதுரை,

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது. இன்று (15ம் தேதி) அவனியாபுரத்திலும், நாளை (16-ம் தேதி) பாலமேட்டிலும், நளை மறுநாள் (17 ம்தேதி) அலங்கநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய விஜய், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார்.  அவருக்கு இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோல, 13 காளைகளை அடக்கிய பாரத், 8 காளைகளை அடக்கிய திருநாவுக்கரசு ஆகியோரும் சிறந்த வீரர்களாக தேர்வாகினர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகளாக வழங்கப்பட்டன.

போட்டியின் போது, காளைகள் முட்டியதில் 71 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர்  மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...