மாநில செய்திகள்

பெரியார் விருது வழங்கப்படாதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி; சில மணி நேரத்தில் விருது அறிவித்த அரசு + "||" + Why is Periyar not awarded? mkstalin

பெரியார் விருது வழங்கப்படாதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி; சில மணி நேரத்தில் விருது அறிவித்த அரசு

பெரியார் விருது வழங்கப்படாதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி;  சில மணி நேரத்தில் விருது அறிவித்த அரசு
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பெரியார் விருது குறித்து மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், செஞ்சி ராமச்சந்திரனுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு முன், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரியார் விருதுடன் ரூ. 1. லட்சம் ரொக்கமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.