மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின் + "||" + If local elections were held properly 100 percent success DMK will be obtained DMK leader Stalin

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.மு.க. பெற்று இருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. கழகத்தின் சார்பில் வல்லக்கோட்டை பகுதியில்திமுக கட்சியின் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் பெண்கள் அனைவரும் பாரம்பரிய உடை சேலை அணிந்து கொண்டு சமத்துவ பொங்கலை மிக சிறப்பாக கொண்டாடினர். தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதத்தில் மயில் ஆட்டம், ஒயிலாட்டம், இசைக்கச்சேரி, கிராமியபாடல் மற்றும் கோலாட்டம், குதிரை ஆட்டம் போன்ற சிறப்பான ஆட்டங்கள் நடைபெற்றன.

பின்னர் பொங்கல் விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.