தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு + "||" + In Centre’s big outreach, group of ministers to travel to Jammu-Kashmir next week

ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு

ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு
மத்திய அமைச்சரவை குழு, அடுத்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


அதைதொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தற்போது அங்கு இயல்புநிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அடுத்த வாரம் 19-ம் தேதி முதல் 24 -ம் தேதி வரையில் மத்திய அமைச்சர்கள், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பயணத்தின்போது அமைச்சர்கள் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதோடு, அரசின் இந்த முடிவின் மூலம் மக்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீர்: 15 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் பயங்கரவாதி ஒருவர் கைது
ஜம்மு-காஷ்மீரில் 15 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில், பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவுக்கு மத்திய அரசின் 6 நபர் நிபுணர் குழு பயணம்
கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு செல்கிறது.
3. மாநகர பஸ்களில் பெண்கள் இலவச பயணம்: ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்புக்கு பிறகு, ஷேர், வாடகை ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சவாரி கிடைக்காமல் தவிப்பதாகவும் அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
4. தனி விமானத்தில் டெல்லி பயணம்: ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். அப்போது, ‘நீட்' தேர்வு, மேகதாது அணை விவகாரம் உள்பட பல்வேறு தமிழக பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.
5. அரசு பஸ்சில் மகளிர் இலவச டிக்கெட்டை கொடுத்து வடமாநில வாலிபர்களிடம் கட்டணம் வசூல் கண்டக்டர் பணி இடைநீக்கம்
சேலத்தில் அரசு பஸ்சில், மகளிர் இலவச டிக்கெட்டை வடமாநில வாலிபர்களுக்கு கொடுத்து கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.