மாநில செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி + "||" + Palamedu Jallikattu started

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி
உறுதி மொழி ஏற்புடன் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
மதுரை

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 700 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. 923 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு பத்திற்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்காக மூன்று நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

வாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை பரிசோதனை செய்யவும் அடிபடும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு காவல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காளைகளை வாடிவாசலுக்கு அனுப்புவதற்காக, மருத்துவ பரிசோதனைகள் தொடங்கியுள்ளது.

காளைகளுக்கு மது, போதைப்பொருள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்ற சோதனை உட்பட மாடுகளுக்கு காய்ச்சல் வேறு ஏதும் உடல் உபாதைகள் இருக்கிறதா என்றும் மருத்துவ சோதனை செய்யப்படுகிறது.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்து களத்தில் விளையாடும் மாட்டிற்கும் கார், பசுமாடுடன் கன்று, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

கலெக்டர் வினய் உறுதிமொழி  வாசிக்க அதனை  மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.முதல் சுற்றில் 75 வீரர்கள் இறங்கி உள்ளனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பாலமேடு  ஜல்லிக்கட்டு துவங்க உள்ள நிலையில் போலீசார் திடீர் என லேசான  தடியடி நடத்தினர். டோக்கன் பெறாமல் 100க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி செய்யபட்டதால்  அத்துமீறி காளைகளுடன் உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று கூடுதல் தண்ணீர் திறப்பு
மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...