தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டில் லட்சுமியின் படம் அச்சிட்டால் பணமதிப்பு உயரும் - சுப்பிரமணியன் சுவாமி + "||" + Goddess Lakshmi on notes may improve condition of rupee: Subramanian Swamy

ரூபாய் நோட்டில் லட்சுமியின் படம் அச்சிட்டால் பணமதிப்பு உயரும் - சுப்பிரமணியன் சுவாமி

ரூபாய் நோட்டில் லட்சுமியின் படம் அச்சிட்டால் பணமதிப்பு உயரும் - சுப்பிரமணியன் சுவாமி
இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பண மதிப்பு உயரும் என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
போபால்

அமெரிக்க - ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.

இந்நிலையில்,  மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் 'சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா' என்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றிய சுப்பிரமணியன் சுவாமி  கூறியதாவது:-

இந்தோனேசிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், விநாயகர் தடைகளை நீக்குபவர். இதை கருத்தில் கொண்டு, இந்திய ரூபாய் நோட்டிகளில் லட்சுமியின் படம் அச்சிட தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.

குடியுரிமை [திருத்தம்] சட்டத்தில் ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை.காங்கிரசும் மகாத்மா காந்தியும் இதையே (சி.ஏ.ஏ) கோரின. மன்மோகன் சிங் 2003 இல் நாடாளுமன்றத்திலும் இதனை நிரைவேற்றவேண்டும் என்று கோரினார். நாங்கள் அதை செய்தோம். பாகிஸ்தானின் முஸ்லிம்களுக்கு நாங்கள் அநீதி இழைத்தோம் என்று இப்போது அவர்கள் அதை ஏற்கவில்லை. என்ன அநீதி இழைக்கப்பட்டது? பாகிஸ்தானின் முஸ்லிம்கள் வர விரும்பவில்லை, நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என கூறினார்.