தேசிய செய்திகள்

மும்பை-புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது; 40 பேர் காயம் + "||" + Eight coaches of Mumbai-Bhubaneswar LTT Express derail in Odisha, 40 injured

மும்பை-புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது; 40 பேர் காயம்

மும்பை-புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது; 40 பேர் காயம்
ஒடிசாவில் மும்பை-புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் 8 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன இதில் 40 பேர் காயமடைந்தனர்
மும்பை

 மும்பை-புவனேஸ்வர் லோக்மான்ய திலக்  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்  இன்று வியாழக்கிழமை கட்டாக்கில் உள்ள நெர்குண்டி ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டதில் குறைந்தது 40 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 5 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

காலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.  சலாகான் மற்றும் நெர்குண்டி இடையே ஒரு சரக்கு ரெயில்  மோதியதில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசின்  எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. 

கிழக்கு கடற்கரை ரயில்வே (ஈகோஆர்) வட்டாரங்கள் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றும்  அதே நேரத்தில் இந்த விபத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை  என கூறி உள்ளன.

காயமடைந்த பயணிகள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 5 பயணிகள் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை விரைந்துள்ளன.