தேசிய செய்திகள்

பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார் + "||" + Both BJP and Congress are two sides of the same coin; Mayawati says

பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்

பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது 64–வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

லக்னோ, 

மக்கள் மீது அடக்குமுறையை கையாண்டதால் காங்கிரஸ் தோல்வி அடைந்து, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது பா.ஜனதாவும் காங்கிரஸ் செய்த அதே தவறை செய்கிறது. எனவே மக்கள் பா.ஜனதாவையும் தோற்கடிப்பார்கள். காங்கிரசும், பா.ஜனதாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

நாட்டில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா அமைதியான நாடு என்ற எண்ணத்தில் இருக்கும் உலகுக்கு ஒரு எதிர்மறையான தகவலை அளித்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி எந்த மத்திய அரசிலும் இணைந்ததில்லை. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகளை நாங்கள் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி; பிரியங்கா பங்கேற்றார்
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அமைதி பேரணியில் பிரியங்கா பங்கேற்றார்.
2. டெல்லியில் நடந்த வன்முறை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று- சோனியா காந்தி குற்றச்சாட்டு
டெல்லியில் நடந்த வன்முறை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
3. உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
4. டிரம்ப் வருகை குறித்த காங்கிரசின் விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி
டிரம்ப் வருகை குறித்த காங்கிரசின் விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
5. காங்கிரசில் என்ன தான் நடக்கிறது...? ராகுல்காந்தி தலைவராவாரா...? மாட்டாரா...?
காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தலைமை காங்கிரசுக்குள் பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.