தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் ; 22-ந் தேதி தூக்கு உறுதியானது + "||" + President Ram Nath Kovind rejects the mercy petition of 2012 Delhi gang-rape case convict Mukesh Singh

நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் ; 22-ந் தேதி தூக்கு உறுதியானது

நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் ; 22-ந் தேதி தூக்கு உறுதியானது
நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சக பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கருணை மனுவை நிராகரித்து உள்ளார்.
புதுடெல்லி, 

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில்  குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த  தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22–ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7–ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்காக திகார் சிறையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை பரிசீலித்து வந்த உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்து  இருந்தது. அதன்படி நேற்று இரவு உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தது.

இதைத் தொடர்ந்து  இன்று ஜனாதிபதி, குற்றவாளி முகேஷ் குமார் சிங் கருணை மனுவை நிராகரித்தார். இதனால்  வரும் 22-ந் தேதி நிர்பயா குற்றவாளிகளின்  தூக்கு  தண்டனை நிறைவேறும் என்பது  உறுதியாகி உள்ளது.

முகேசின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சக பரிந்துரையை ஏற்று ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா வழக்கு ; மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை பிப்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
2. நிர்பயா வழக்கு ;மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3. ‘நிர்பயா’ வழக்கு 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா? - டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளான 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா என்பது குறித்த டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
4. ‘நிர்பயா’ வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட தடை நீங்குமா? - மத்திய அரசின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
‘நிர்பயா’ வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட தடை நீங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் வழக்கை டெல்லி ஐகோர்ட்டு, நேற்று விடுமுறை நாள் என்றபோதும் விசாரித்து, தீர்ப்பை ஒத்தி வைத்தது.
5. நிர்பயா வழக்கு; 3வது குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு
நிர்பயா வழக்கில் 2 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3வது குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்து உள்ளார்.