தேசிய செய்திகள்

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு ஆலோசனை கூட்டம்: மாநில தலைமை செயலாளர்கள் பங்கேற்பு + "||" + Population Record Product Advisory Meeting: Participation of State Chief Secretaries

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு ஆலோசனை கூட்டம்: மாநில தலைமை செயலாளர்கள் பங்கேற்பு

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு ஆலோசனை கூட்டம்: மாநில தலைமை செயலாளர்கள் பங்கேற்பு
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி,

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிக்கும் பணிகளை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான முன்னோடி பணிகள் எனக்கூறி பல மாநிலங்கள் இந்த என்.பி.ஆர். பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


குறிப்பாக பஞ்சாப் மற்றும் கேரள மாநிலங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட சபையிலேயே தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இதைப்போல ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களும் இந்த பணிகளை மேற்கொள்ளமாட்டோம் என அறிவித்து இருக்கின்றன.

எனினும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.பி.ஆர். தயாரிப்பு பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.பி.ஆர். தயாரிப்பு பணிகளுக்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை மத்திய அரசு நேற்று டெல்லியில் நடத்தியது. இந்த கூட்டத்தை உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தொடங்கிவைத்தார்.

இதில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர்கள் கலந்துகொண்டனர். சில மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு பதிலாக முதன்மை செயலாளர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்காளத்தில் இருந்து எந்த அதிகாரியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரித்தல் தொடர்பான விளக்க காட்சிகள் வெளியிடப்பட்டன. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக முதல் முறையாக பயன்படுத்தப்படும் செல்போன் செயலியின் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக, குறிப்பாக பெற்றோரின் பிறந்த இடம் தொடர்பான கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் அதிருப்தி வெளியிட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு அதிகாரிகள், மேற்படி கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும், விருப்ப கேள்விகள் தான் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில தலைமை செயலாளர் டி.பி.குப்தா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெற்றோரின் பிறந்த இடம் உள்பட தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கேள்விகளில் சில சாத்தியமற்றவை என நாங்கள் சுட்டிக்காட்டினோம். இந்த நாட்டில் உள்ள ஏராளமான பொதுமக்களுக்கு தங்கள் பெற்றோரின் பிறந்த இடம் தெரியாது. இது போன்ற கேள்விகளுக்கான நோக்கம் என்ன என்று தெரியவில்லை. எனவே இந்த கேள்விகளை நீக்க வேண்டும் என கூட்டத்தில் நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால் இது போன்ற கேள்விகள் முந்தைய கணக்கெடுப்பிலும் கேட்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் இந்த முறை தனிநபரின் பிறந்த இடத்தை அவர்களது பெற்றோரின் பிறந்த இடத்துடன் இணைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும் இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது கட்டாயம் அல்ல என்றும் அவர்கள் கூறினார்கள். இவ்வாறு டி.பி.குப்தா தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிக்கப்பட்டு வருவதாக, மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
2. தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு: மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை - மந்திரி தகவல்
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு தொடர்பாக மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
3. மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் அபராதம்; மத்திய அரசு எச்சரிக்கை
மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
4. பெரிய பட நிறுவனம் தயாரிக்கிறது: “சந்திரமுகி-2’ படம் விரைவில் உருவாகும்” - பி.வாசு பேட்டி
சந்திரமுகி-2 படம் விரைவில் உருவாக உள்ளதாகவும், பெரிய பட நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் பி.வாசு தெரிவித்துள்ளார்.