தேசிய செய்திகள்

நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட் + "||" + The news of Shabana Azmi’s injury in an accident is distressing- Narendra Modi

நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்

நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்
நடிகை சபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தது குறித்த செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகை சபானா ஆஸ்மி (வயது 69).  இவர் மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை 3.30 மணியளவில் சென்றபொழுது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார்.

இதனை அடுத்து சபானா ஆஸ்மி மீட்கப்பட்டு உடனடியாக நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சபனா ஆஸ்மியுடன் அவரது கணவர் ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார்.  எனினும் விபத்தில் அவர் காயமின்றி தப்பினார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “நடிகை சபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தது குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
தஞ்சையில், பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
2. நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
3. மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர்; வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
4. குஜராத் ரசாயன ஆலையில் விபத்து: பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பலி
குஜராத் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
5. கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயம்
கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.