உலக செய்திகள்

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதி கைது + "||" + Iraq nabs 250 Kg ISIS leader

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதி கைது

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதி கைது
ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
மொசூல்,

ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  எனினும் இந்த தாக்குதலில் பொதுமக்களில் பலர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்தும் உள்ளனர்.

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.  ஏறக்குறைய 250 கிலோ (560 பவுண்டுகள்) உடல் எடை கொண்ட அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியும் வந்துள்ளார்.

அவரை ஈராக்கிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் வைத்து கைது செய்தது.  ஆனால் கைது செய்யப்பட்ட முப்தியை காரில் ஏற்ற முடியவில்லை.  அதிக உடல் எடையுடன் குண்டாக இருந்த முப்தியை காருக்குள் ஏற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில், லாரி ஒன்றில் அவரை ஏற்றி கொண்டு சென்றனர்.

ஐ.எஸ். அமைப்பினருக்கு விசுவாசமுடன் செயல்படாத இஸ்லாமிய மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் (பத்வா) முப்தி பிறப்பித்து உள்ளார் என ஈராக்கிய போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வத்தலக்குண்டு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது - 27 பவுன் நகை பறிமுதல்
வத்தலக்குண்டு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 27 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
2. பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது; 10 பவுன் மீட்பு
குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது பரபரப்பு தகவல்கள்
விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. 40 பவுன் நகைகள் மீட்பு: ‘‘சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டேன்’’ கைதான வாலிபர் வாக்குமூலம்
குமரியில் கொள்ளை போன 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பணம் வைத்து சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
5. குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் காதலன் கைது
கிருஷ்ணகிரி அருகே குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.