தேசிய செய்திகள்

பத்திரிகையாளர் கொலை வழக்கு; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் + "||" + Journalist murder case; CBI Filing of indictment

பத்திரிகையாளர் கொலை வழக்கு; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

பத்திரிகையாளர் கொலை வழக்கு; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
பத்திரிகையாளர் கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அகர்தலா,

திரிபுராவின் முன்னணி பத்திரிகையில் பணியாற்றி வந்தவர் சுதிப் தத்தா பவுமிக். இவர், திரிபுரா மாநில ரைபிள்ஸ் படைப்பிரிவின் தலைமை அதிகாரி தபன் டெப்பர்மா என்பவரின் ஊழல் விவகாரங்களை தனது பத்திரிகையில் எழுதினார். மேலும் பல தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி வந்தார். எனவே, மேற்கொண்டு ஊழல் விவரங்களை வெளியாகாமல் இருப்பதற்காக, சுதிப் தத்தா பவுமிக்கை கொலை செய்ய தபன் டெப்பர்மா சதித்திட்டம் தீட்டினார்.


அதன்படி, 2017-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி, பவுமிக்கை தனது படைப்பிரிவு அலுவலகத்துக்கு தபன் டெப்பர்மா அழைத்தார். பவுமிக் வந்தவுடன், அவரை டெப்பர்மா உள்பட 5 போலீசார் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு இவ்வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. 5 போலீசார் மீதும் கோர்ட்டில் சி.பி.ஐ. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தந்தை-மகன் கொலை வழக்கு: முக்கிய நபர்கள் அனைவரும் கைது- சிபிசிஐடி ஐஜி சங்கர்
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
2. சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: பிரபல ரவுடி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4. வங்கி அதிகாரிகள் துணையுடன் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1,038 கோடி கருப்பு பணம்
கடந்த 2014-2015 நிதியாண்டில், ஹாங்காங்குக்கு ரூ.1,038 கோடி கருப்பு பணம் அனுப்பப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. சென்னை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.