தேசிய செய்திகள்

சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார்: எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல் + "||" + After independence, Gandhi wanted to live in Pakistan: Information on the book by MJ Akbar

சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார்: எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல்

சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார்: எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல்
சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பியதாக, எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர், ‘காந்தியின் இந்துத்துவம்: ஜின்னாவின் இஸ்லாமுக்கு எதிரான போராட்டம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதில், 1940-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தலைவர்களின் கொள்கை, ஆளுமை, தவறுகள் ஆகியவற்றை விவரித்துள்ளார்.


அதில், அக்பர் கூறியிருப்பதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை காந்தி விரும்பவில்லை. இரு நாடுகளிலும் சிறுபான்மையினராக இருப்பவர்களின் கதி பற்றித்தான் அவர் உடனடியாக கவலைப்பட்டார்.

பிரிவினை நடப்பது உறுதியாக தெரிந்தவுடன், கிழக்கு பாகிஸ்தானில் உள்ள நவகாளிக்கு சென்று, மீண்டும் கலவரம் நடப்பதை தடுக்க விரும்பினார்.

1947-ம் ஆண்டு மே 31-ந் தேதி, ‘எல்லை காந்தி’ என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கானை காந்தி அழைத்தார். எல்லை காந்தியிடம், “நான் பிரிவினையை விரும்பவில்லை. பிரிவினைக்கு பிறகு, வடமேற்கு எல்லைப்புறத்துக்கு சென்று பாகிஸ்தானில் வசிக்க போகிறேன். இதற்காக யாரிடமும் அனுமதி கேட்கப்போவதில்லை. அவர்களை மீறியதற்காக என்னை கொலை செய்தாலும், சிரித்த முகத்துடன் மரணத்தை தழுவுவேன். அவர்கள் என்னை என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்” என்று காந்தி கூறினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு
முஸ்லீம்களை 1947-ல் பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ்சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2. இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12.5 கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் மூண்டால் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் பலியாவார்கள் முனிச் பாதுகாப்பு அறிக்கை தெரிவித்து உள்ளது.
3. பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு: "தலையிட வேண்டாம்" துருக்கி ஜனாதிபதிபதிக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டபோது ஜம்மு-காஷ்மீர் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
4. ஹபீஸ் சயீதுக்கு தண்டனை: பாகிஸ்தானின் நடவடிக்கை மீது இந்தியா சந்தேகம்?
ஹபீஸ் சயீதுக்கு தண்டனை வழங்கிய பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது
5. இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றதால் சர்ச்சை
இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.