மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் விழுப்புரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + DMK Likes to rule MK Stalin's speech

சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் விழுப்புரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்  விழுப்புரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம்,

விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலையில் கலைஞர் அறிவாலயத்தின் வளாகத்தில் ரூ.15 லட்சம் செலவில், மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்துவைத்தார். பின்னர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேதனை பட்டியல்

திருவாரூர் கருணாநிதியை கலைஞர் கருணாநிதி என்று மாற்றிய ஊர் இந்த விழுப்புரம்தான். சாமானியர்களுக்காக ஆட்சி நடத்தியவர் அவர். தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சாமானியர்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியால் இதுபோன்று ஒரு சாதனை பட்டியலை கொடுக்க முடியுமா? அவர்களால் வேதனை பட்டியலைத்தான் தர முடியும். சட்டம்-ஒழுங்கை பற்றி கேட்டால் அதிலும் நாங்கள்தான் முதல் இடம் என்கிறார்கள். இதை சொல்வதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா? பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். போலீஸ் உயிருக்கே பாதுகாப்பு இல்லை, இதைவிட ஒரு சாட்சி தேவையா?

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை இன்றைக்கு ஓ.பன்னீர்செல்வம் காப்பாற்றி கொண்டிருக்கிறாரா? இல்லையா? தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் எங்களது முதல் வேலை.

கோடநாடு சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே? இந்த வழக்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று மக்கள் யோசிக்க வேண்டும். இதற்கு அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது உங்களது வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுவோம். இதை மறந்து விடாதீர்கள்.

நாடகம்

ஈழத்தமிழர்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் துரோகம் விளைவிக்கிற குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க.வினர் ஆதரிக்கிறார்கள். இதுபற்றி சட்டமன்றத்தில் நாங்கள் பேசினோம். அதற்கு தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது, எங்கும் கலவரம் இல்லை என்கிறார். தமிழக மக்கள் அமைதியான முறையில் போராடுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது. இப்படியிருக்க எடப்பாடி ஏதோ சட்டமேதை போன்று பேசி வருகிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போராடுகிறவர்கள் முட்டாள்களா? இரட்டை துரோகம் விளைவிக்கிற இந்த சட்டத்தை ஆதரித்துவிட்டு இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்று நாடகம் நடத்துகிறார்கள். உங்களது நாடகம் செல்லுபடியாகாது என்பதற்கு உதாரணம் உள்ளாட்சி தேர்தல் வெற்றி. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் நாங்கள் வளர்பிறை, தி.மு.க. தேய்பிறை என்பார்கள்.

வளர்பிறை, தேய்பிறை

மாவட்ட கவுன்சிலர் பதவி 512-ல் தி.மு.க. 242 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒன்றிய கவுன்சிலர் பதவி 5,076-ல் 2,090 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது, எது வளர்பிறை, எது தேய்பிறை.

அ.தி.மு.க. தோற்றதை வெற்றி பெற்றதாகவும், தி.மு.க. வெற்றி பெற்றதை தோற்றதாகவும் அறிவித்தனர். சில இடங்களில் தேர்தலை நிறுத்தி வைத்துள்ளனர். சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, 20 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றதை அறிவிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். தேர்தல் விதிகள் மீறப்பட்டு இருக்கிறது என்று நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். அதற்கு கண்காணிப்பு கேமரா பதிவுகளை 28-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 20 இடங்களில் நிச்சயம் நாம் தான் வெற்றி பெறுவோம்.

கிளைமாக்ஸ்

உள்ளாட்சி தேர்தல் இடைவேளை தான். சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். அதை தடுப்பதற்காக ஆளும் கட்சியினர் மட்டுமின்றி சில ஊடகங்களும் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். கருணாநிதி சந்திக்காத சதிகளா? தோல்வியை கண்டு துவண்டு மூலையில் முடங்குகிற இயக்கம் தி.மு.க. அல்ல. தலைவர் கருணாநிதி நமது உயிர், நமது உடல், நமது சக்தி. அது நம்மை இயக்கும், நாம் தமிழகத்தை இயக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணையும் விழா மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை
மதுரையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.
2. மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. கூட்டத்தில், உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
3. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? - மு.க.ஸ்டாலின் டுவிட்
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து - மு.க.ஸ்டாலின்
மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து மு.க.ஸ்டாலின் தகவல்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்தில் இதுவரை கையெழுத்திட்டவரின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.