சினிமா செய்திகள்

"உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்" - ரஜினிகாந்துக்கு நடிகை குஷ்பு ஆதரவு + "||" + "Do what your mind says" - Actress Khushboo backs Rajinikanth

"உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்" - ரஜினிகாந்துக்கு நடிகை குஷ்பு ஆதரவு

"உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்" -  ரஜினிகாந்துக்கு நடிகை குஷ்பு ஆதரவு
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை

சென்னையில் நடைபெற்ற துக்ளக்  இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய  நடிகர் ரஜினிகாந்தின் பெரியார் குறித்த கருத்தும், அதைத் தொடர்ந்து அவரது பேட்டியும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது

ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. பெரியார் குறித்து பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த், அவுட் லுக் இதழில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி, இல்லாத விசயத்தையோ அல்லது கற்பனையாகவோ நான் எதையும் கூறவில்லை. பத்திரிகையில் வந்ததைத் தான் கூறினேன். எனவே நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இக்கருத்துக்கு  குஷ்பு பதில் அளித்துள்ளார். அதில், சரியோ அல்லது தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மை மட்டும்தான். பயத்தை வைத்து, ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள். உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். எல்லோருக்கும் ஏதாவது கருத்து இருக்கும், நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது, என்று குஷ்பூ தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
2. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்
படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
3. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
4. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
5. நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.