தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + J&K: 2 militants killed, 2 soldiers injured in Awantipora encounter

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு ; 8 பேர் பலி
ஜெர்மனியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.
2. காஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய படை போலீசார் 2 பேர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை
காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
4. காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது
காஷ்மீரில் மாநிலத்தில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது.
5. காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிப்பு
காஷ்மீரில் நிலவி வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.