தேசிய செய்திகள்

வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்: அமலாக்கத்துறை நடவடிக்கை + "||" + In the case of bank fraud disappeared, nirav Modi's assets auctioned - Enforcement action

வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லண்டனுக்கு தப்பிச்சென்ற அவர், கைது செய்யப்பட்டு, லண்டன் சிறையில் உள்ளார்.


இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துகளில் சிலவற்றை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மும்பையை சேர்ந்த ‘சப்ரான்ஆர்ட்‘ என்ற பிரபல ஏல நிறுவனத்தில் ஏலம் நடக்கிறது.

2 கட்டங்களாக ஏலம் நடக்கிறது. முதலில், பிப்ரவரி 27-ந் தேதி மும்பையில் நேரடியாகவும், மார்ச் 3 மற்றும் 4-ந் தேதிகளில் ஆன்லைன் மூலமாகவும் ஏலம் நடைபெறும். இந்த ஏலங்களில், நவீன, சமகால இந்திய கலைஞர்களின் 15 கலைப்பொருட்கள், பிரபல ஓவியர் எம்.எப்.உசைனின் ‘மகாபாரதம்‘ தொடரின் ஓவியங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி இருக்கும்.

அத்துடன், விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், கைப்பைகள், கார்கள் ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன.