மாநில செய்திகள்

டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + Delta and South Coast Districts are likely to experience light rains - Meteorological Department

டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தென்தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கீழ் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக டெல்டா, காரைக்கால் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். 

வடகிழக்கு திசையிலிருந்து வலுவான காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வீச வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆம்பன் புயலுக்கு 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்; கார்கள் மோதல்
ஆம்பன் புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாசில் 5,500 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதுடன் 2 பேர் பலியாகி உள்ளனர்.