மாநில செய்திகள்

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் - அர்ஜுன் சம்பத் + "||" + Dravidian darkness will leave through the spiritual politics of Rajinikanth - Arjun Sampath

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் - அர்ஜுன் சம்பத்
ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை,

துக்ளக் பொன்விழாவின் போது பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தனது கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தான் கற்பனையாக எதுவும் பேசவில்லை என்றும் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டார்.

மேலும், தன்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம் என்றும் பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசிய போது, “ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும்” என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்து பேசிய அவர், “ஓ.பி.எஸ்., நல்ல கடவுள் பக்தர், அவரைக்கூட திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது. உண்மையில் அவர் பெரியார் கொள்கை கொண்டவர் அல்ல” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு
தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார்? என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைது
நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார்? என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. 'ரஜினி மலை, அஜித் தலை' அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ரைமிங்
'ரஜினி மலை, அஜித் தலை' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரைமிங்காக கூறி உள்ளார்.
4. ரஜினிகாந்த் படத்தின் பெயர், ‘அண்ணாத்த?’
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அவருடைய 168-வது படத்துக்கு, ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
5. ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணியா? - டாக்டர் ராமதாஸ் பதில்
ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்பதற்கு டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.