தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர் + "||" + Rajasthan Baby Boy Named "Congress" By Father

ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர்

ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர்
ராஜஸ்தான் மாநிலத்தில் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் ஜெயின். இவர் ராஜஸ்தான் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டரான இவர் தனது குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இவரது குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

தங்கள் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டது என்றும், இந்த குழந்தையும் 18 வயதாகும் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படும் என்றும் வினோத் ஜெயின் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். குழந்தைக்கு காங்கிரஸ் என்று பெயரிடுவதற்கு அவரது குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின்னர் விடாப்பிடியாக இருந்து அவர்களை சம்மதிக்க வைத்ததாகவும் வினோத் கூறியுள்ளார்.

வினோத் ஜெயினுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 ஆண்டுகளுக்கு பின்னர் வினோத் ஜெயினுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கணவர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கணவர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் சாவு
ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் உயிரிழந்தார்.
3. கொரோனா பெரிய பிரச்சினை; இந்திய பொருளாதாரம் அழியும் -ராகுல் காந்தி
கொரோனா பெரிய பிரச்சினை இந்தியப் பொருளாதாரம் அழியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
4. ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் இருந்து ராஜினாமா: நீக்கியதாக கட்சி மேலிடம் அறிவிப்பு
ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மேலிடம் அறிவித்துள்ளது.
5. ம.பியில் காங்.ஆட்சி கவிழ்கிறது? அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 19 பேர் ராஜினாமா
ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ராஜினாமாவால் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.