மாநில செய்திகள்

சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன் + "||" + Neither Sasikala nor I have ever been traitors No internet opportunity Titivitinakaran

சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன்

சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன்
சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார்.
சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- 

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியது. தமிழர் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த மாபெரும் தலைவர் பெரியார் குறித்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து உண்மை தன்மை கேட்டறிந்து பேசியிருக்கலாம்.

கடவுள் மறுப்பிற்கு எதிரானவர்கள் கூட பெரியாரை மதிப்பவர்கள் தான். தந்தை பெரியார் ஒரு சமூக நீதி போராளி, பெண்ணுரிமை போராளி என தெரிவித்தார். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, அவர் ஒரு இயக்கம். ரஜினிகாந்த், தலைவர்களின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது 

மேலும் , பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும.

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வர சட்ட ரீதியிலான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். நானோ, சசிகலாவோ துரோகிகளோடு ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது சசிகலா ரூ.168 கோடிக்கு ‘பினாமி’ சொத்துகள் வாங்கியது உண்மை - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, சசிகலா ரூ.168 கோடிக்கு ‘பினாமி’ சொத்துகள் வாங்கியது உண்மை என சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை கூறியுள்ளது.
2. 500, 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை - வருமான வரித்துறை மும்முரம்
செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது.
3. வருமானத்தை மறைத்த விவகாரம்: ரஜினிகாந்திடம் குறைந்தபட்ச அபராதமாக ரூ.66 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறை முடிவு
வருமானத்தை மறைத்த விவகாரத்தில் ரஜினிகாந்திடம் குறைந்தபட்ச அபராதமாக ரூ.66.22 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
4. 3 ஆண்டுகள் ஆகியும் சசிகலா ரூ.10 கோடி அபராதம் செலுத்தவில்லை: கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க நேரிடும்
ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
5. மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது -ரஜினிகாந்த்
மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை