மாநில செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது + "||" + DMK Companion Parties Meeting on Citizenship Amendment Act

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் தோழமை கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது.
2. குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
குடியுரிமை திருத்த சட்டம் எந்தவகையிலும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
3. பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி
பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஊட்டியில் பேரணி நடந்தது.
4. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எஸ்.புதூர் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
5. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.