தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை: 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து + "||" + Brazilian chancellor talks with PM Modi in Delhi: Signing 15 deals

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை: 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை: 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புதுடெல்லி,

இந்திய குடியரசு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ பங்கேற்கிறார்.


இதற்காக தனது மகள் லாரா போல்சனரோ, மரு மகள் லெடிசியா பிர்மோ, 8 மந்திரிகள் 4 எம்.பி.க்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவுடன் நேற்று முன்தினம் அவர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டு பிரேசில் அதிபரை சிறப்பாக வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, ராணுவம், பாதுகாப்பு, மருத்துவம், அறிவியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதைப்போல முதலீட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், பிரேசில் வெளியுறவு மந்திரி எர்னெஸ்டோ அரஜோவும் கையெழுத்திட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி; பிரியங்கா பங்கேற்றார்
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அமைதி பேரணியில் பிரியங்கா பங்கேற்றார்.
2. டெல்லியில் வன்முறை: தேசத்துரோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடக்கம் - பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை
டெல்லியில் வன்முறை தொடர்பாக, தேசத்துரோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடங்கி உள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. டெல்லியில் அமைதியை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் அறப்போராட்டம்
டெல்லியில் அமைதியை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் அறப்போராட்டம் நடத்தினர்.
4. டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
5. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்
டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.