மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இயங்கி வரும் முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு என தகவல் + "||" + TNPSC Group 4 Selection Abuse Information on contacting a leading training organization

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இயங்கி வரும் முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு என தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இயங்கி வரும் முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு என தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இயங்கி வரும் முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்த டி.என்.பி.எஸ்.சி., அவர் கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து குருப்-4 தேர்வு மோசடி குறித்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். 

அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட், ஐ.ஜி. சங்கர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் சூப்பிரண்டுகள் ரங்கராஜன், மல்லிகா, மாடசாமி, விஜயகுமார் ஆகியோரின் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் ரமேஷ் (வயது 39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றும் திருக் குமரன்(35), முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ் குமார்(21) ஆகிய 3 பேரை நேற்றுமுன் தினம் கைது செய்தனர்.

முறைகேடு புகாரில் சிக்கிய தேர்வு மையங்களில் தேர்வு அதிகாரிகளாக செயல்பட்ட கீழக்கரை, ராமேசுவரம் தாசில்தார்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் நேற்று மேலும் 4 பேரை கைது செய்தனர். இவர்களில் ஒருவர் இடைத்தரகர்; மற்ற 3 பேரும் தேர்வர்கள் ஆவார்கள்.

சென்னை ஆவடியைச் சேர்ந்த து.வெங்கட்ராமன்(38) என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு தேர்வர்களிடம் தலா ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்களில் அதிரடி சோதனை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இயங்கி வரும் முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு என தகவல் வெளியாகி உள்ளது.

தலைமறைவாக உள்ள தேர்வர் முத்துராமலிங்கம் உள்பட பலர் இந்நிறுவனத்தில் படித்தது அம்பலமாகி உள்ளது. ஏற்கனவே வங்கி தேர்வு முறைகேட்டில் சிக்கிய நிறுவனம் தற்போது குரூப் 4 தேர்வு முறைகேட்டிலும் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள தேர்வர் முத்துராமலிங்கத்தை  சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...