மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து பத்ம விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - மு.க.ஸ்டாலின் டுவிட் + "||" + Congratulations to all who receive the Padma Award mk stalin

தமிழகத்தில் இருந்து பத்ம விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - மு.க.ஸ்டாலின் டுவிட்

தமிழகத்தில் இருந்து பத்ம விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - மு.க.ஸ்டாலின் டுவிட்
தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகள் பெறுவோருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகளைப் பெறும் சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு சீனிவாசன், இசைக்கலைஞர்களான லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! மேலும் பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.