மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + They will be punished no matter what the field Minister Jayakumar

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
டிஎன்பிஎஸ்சி துறையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது.

99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்த டி.என்.பி.எஸ்.சி., அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு 3 வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் நாள் விசாரணையின்போது பள்ளிக்கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டார். இவர் மீது காசோலை மோசடி வழக்குகளும் உள்ளன. இந்த மோசடி விவகாரத்தில் இவர் இடைத்தரகராக செயல்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் பள்ளிகல்வித்துறையில் பணியற்றிவரும் ஓம் காந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி தேடி கைது செய்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி துறையில் உள்ள கருப்பு ஆடுகள் களையப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.  எந்த தேர்வில் முறைகேடு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றவாளி யார் என்று தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவிக்கலாம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரத்தில் குற்றவாளி யார் என்று தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்
அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
3. மக்கள் விரும்பாத திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4. திருவள்ளுவரை போல, அதிமுகவும் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
திருவள்ளுவர் சாதி, இனம், மதம் என அனைத்தையும் கடந்தவர், அந்த நிலையில் தான் அதிமுகவும் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5. பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்
பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசை விமர்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.