தேசிய செய்திகள்

குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து பஞ்சாப்பிற்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்- விவசாயிகள் அச்சம் + "||" + Punjab farmers drum up decibels to beat locusts

குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து பஞ்சாப்பிற்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்- விவசாயிகள் அச்சம்

குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து பஞ்சாப்பிற்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்- விவசாயிகள் அச்சம்
குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து பஞ்சாபின் சில இடங்களிலும் வெட்டுக்கிளிகள் காணப்படுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
சண்டிகர்,

பாகிஸ்தானில் இருந்து படையெடுத்துள்ள லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்களை நாசம் செய்துள்ளன.

இந்த நிலையில் பஞ்சாபில் உள்ள பாசில்கா, முக்த்சர், பதிந்தா ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இந்த வெட்டுக்கிளிகளை பார்த்ததால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து பயிர்களை சேதம் செய்வதற்குள் வேளாண் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெட்டுக்கிளிகளால் பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணத்தொகை வழங்க ராஜஸ்தான் அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதற்காக பீகாரி லால் என்ற பாஜக எம்.எல்.ஏ. ஒரு கூடை நிறைய வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொண்டு ராஜஸ்தான் சட்டமன்ற வளாகத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.