தேசிய செய்திகள்

முதல்வராக ஆசையில்லை டெல்லியின் முன்னேற்றம் தான் முக்கியம் - அரவிந்த் கெஜ்ரிவால் + "||" + No Desire To Be Chief Minister, Want Votes For Delhi's Betterment: Arvind Kejriwal

முதல்வராக ஆசையில்லை டெல்லியின் முன்னேற்றம் தான் முக்கியம் - அரவிந்த் கெஜ்ரிவால்

முதல்வராக ஆசையில்லை டெல்லியின் முன்னேற்றம் தான் முக்கியம் - அரவிந்த் கெஜ்ரிவால்
மீண்டும் முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை என்றும் டெல்லியின் முன்னேற்றத்திற்காக தான் வெற்றி பெற வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆளும்கட்சியான ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கிரேட்டர் கைலாஷ் நகரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது;-

“ஆம் ஆத்மி அரசு, பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த கடினமாக உழைத்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கும் தேர்தல் டெல்லியின் முன்னேற்றத்திற்கானது. தலைநகர் டெல்லியின் முன்னேற்றத்திற்காக ஓட்டுகளை பெற வேண்டுமே தவிர, எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையில்லை.

எங்களுடைய சிறிய அளவிலான பட்ஜெட்டில் 5 ஆண்டுகளில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் பாதி அதிகாரம் வைத்திருக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தப்படவில்லை. நிர்பயா நிதிகள் அனைத்தும் அமித்ஷாவிடம் இருக்கிறது; அதை வைத்து சில கேமராக்களை பொருத்தியிருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று மேலும் 1,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.