மாநில செய்திகள்

காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திட தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட ஒன்று திரள்வீர் - மு.க.ஸ்டாலின் + "||" + You will come together to establish the ownership of Tamil Nadu MKStalin

காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திட தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட ஒன்று திரள்வீர் - மு.க.ஸ்டாலின்

காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திட தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட ஒன்று திரள்வீர் - மு.க.ஸ்டாலின்
காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

தி.மு.க.வைப் பொறுத்தவரை தமிழக விவசாயிகளின் நலன் காப்பதில், அவர்களுக்குத் துணைநிற்பதில் உறுதியாக இருக்கிறது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் – ஒப்பந்தங்கள் – தனியார் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதற்கான அறப்போர்க்களம் தான் ஜனவரி 28ஆம் நாள். விவசாயிகளின் விரோதியான மத்திய பா.ஜ.க. -  மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர். மத்திய ஆட்சி மொழியாகவும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும் தமிழ் அரியணை ஏறவேண்டும். கோவில்களின் கருவறை முதல் கோபுரம் வரை தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...