மாநில செய்திகள்

அமைச்சர் கே.சி.கருப்பணன் மீது ஆளுநரிடம் துரைமுருகன் புகார் + "||" + Durairamurugan complains to Governor Minister KC Karuppanan

அமைச்சர் கே.சி.கருப்பணன் மீது ஆளுநரிடம் துரைமுருகன் புகார்

அமைச்சர் கே.சி.கருப்பணன் மீது ஆளுநரிடம் துரைமுருகன் புகார்
திமுக வென்றுள்ள ஒன்றியங்களுக்கு குறைவான நிதி அளிக்கப்படும் என்ற அமைச்சர் கருப்பணனின் பேச்சுக்கு தமிழக ஆளுநரிடம் திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
சென்னை,

திமுக தலைமைக் கழகம்  இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆளும் அ.தி.மு.க. அமைச்சர் கருப்பணன், ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும்  என பேசியுள்ளது குறித்து  கழகப் பொருளாளர் துரைமுருகன் அவர்கள்  இன்று (26.1.2020), தமிழக ஆளுநருக்கு ஆட்சியின் மரபை மீறி ஒரு அமைச்சரின் உளறல் என புகார் மனு அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.