மாநில செய்திகள்

71வது குடியரசு தின விழா - கோவில், பள்ளி வாசல்களில் பறந்த தேசியக்கொடி! + "||" + 71st Republic Day Celebration

71வது குடியரசு தின விழா - கோவில், பள்ளி வாசல்களில் பறந்த தேசியக்கொடி!

71வது குடியரசு தின விழா - கோவில், பள்ளி வாசல்களில் பறந்த தேசியக்கொடி!
நாட்டின் 71வது குடியரசு தின விழா கோவில் மற்றும் பள்ளிவாசல்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சென்னை,

கடலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி, தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில், பள்ளிவாசல்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதேபோல, புதுக்கோட்டை ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில், ஆயிஷா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற ஏராளமான  இஸ்லாமியர்கள், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள் , குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலின் கிழக்கு கோபுரத்தில், கோவில் தீட்சிதர்கள் தேசியக் கொடி, ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.