தேசிய செய்திகள்

காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது + "||" + 2G Mobile Internet Services Restored in Kashmir

காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது

காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது
காஷ்மீரில் மாநிலத்தில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது.
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இதனால் மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக்கில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொலைபேசி சேவைகள் மற்றும் 2ஜி இணைய சேவைகள் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய படை போலீசார் 2 பேர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை
காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
3. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிப்பு
காஷ்மீரில் நிலவி வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. காஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூடு - சக வீரர்கள் இருவர் பலி
காஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.