தேசிய செய்திகள்

குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு: மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை; ஒடிசாவில் பரபரப்பு + "||" + Protest to celebrate Republic Day: Maoist stone beheaded Excitement in Odisha

குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு: மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை; ஒடிசாவில் பரபரப்பு

குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு: மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை; ஒடிசாவில் பரபரப்பு
குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்த மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புவனேசுவரம்,

ஒடிசா மாநிலம், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலமாகும்.

இங்கு மார்கன்கிரி மாவட்டம், ஜந்துரை கிராமத்துக்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் 2 மாவோயிஸ்டுகள் வந்தனர்.

அவர்கள் அங்குள்ள மக்களை சந்தித்து, குடியரசு தினம் கொண்டாடக்கூடாது என கூறி எச்சரித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அவர்கள் மீது சரமாரியாக கல் வீசி தாக்கினர்.


இதில் ஒருவர் கொல்லப்பட்டார். எஞ்சிய மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவர் கிராம மக்களால் பிடிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவோயிஸ்டுகள் கும்பலாக வந்து அந்த கிராமத்தில் உள்ள 15 வீடுகளுக்கு தீ வைத்தனர்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சம்பவ பகுதியில் கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்-பரபரப்பு
பாகூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் குடியேற முயற்சி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் குடியேற முயன்றதால் பரபரப்பு நிலவியது. அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1,100 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சேலம் விமான நிலைய விரிவாக்கம்: நில அளவீடு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நில அளவீடு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: மேகாலயாவில் திடீர் வன்முறை; 2 பேர் பலி - 6 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு
மேகாலயாவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட திடீர் வன்முறையில் 2 பேர் பலியாகினர்.
5. சூதாட்ட விடுதிகள் தொடங்க கவர்னர் கிரண்பெடி அனுமதி மறுப்பு மத்திய அரசுக்கு கோப்பினை அனுப்பினார்
புதுவையில் சூதாட்ட விடுதிகள் தொடங்க அனுமதி மறுத்துள்ள கவர்னர் கிரண்பெடி அதுதொடர்பாக முடிவெடுக்க கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.