தேசிய செய்திகள்

ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் + "||" + Moderate earthquake in Andhra Pradesh

ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்

ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
விஜயவாடா,

ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணா மாவட்டத்தின் நண்டிகமா, ஜக்கய்யாபேட் போன்ற இடங்களிலும் குண்டூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடு மற்றும் கட்டிடங்கள் குலுங்கியன. 3 முதல் 6 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.


சில இடங்களில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியதையும் காண முடிந்தது. இதனால் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த பகுதிகளில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல ஜனவரி 26-ந்தேதி நில அதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 12 நேரமாக கசியும் வாயு:கிராம மக்கள் பீதி- வெளியேற்றம்
ஆந்திராவில் 12 நேரமாக வாயு கசிந்து வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். அவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
2. கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
3. ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம்: படமாகும் செம்மர கடத்தல்
ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.
4. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.
5. ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைப்பு
ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.