தேசிய செய்திகள்

சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல் + "||" + Continuous monitoring of the health of Indians living in China: Foreign Minister Jaishankar reported

சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல்

சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல்
சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை குறித்து கவலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதன்படி மத்திய அரசும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை மற்றும் நல்வாழ்வு குறித்து தலைநகர் பீஜிங்கில் உள்ள நமது தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் மேலும் தகவல்களுக்கு பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் டுவிட்டர் தகவல்களை பின்தொடருங்கள்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல ஹுபெய் மாகாணத்தின் உகான் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக மாணவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறியுள்ள பீஜிங் இந்திய தூதரகம், இது தொடர்பாக சீன அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் பலி
சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.
2. சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட்
சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளதாகவும், அதில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.
3. சீனாவில் கட்டுக்குள் வரும் கொரோனா: உகான் நகரில் கட்டுப்பாடுகள் தளர்வு
கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான் நகரில் பயணக்கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படுகிறது.
4. சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. சீனா மீது எனக்கு சிறிய வருத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
சீனா மீது எனக்கு சிறிய வருத்தம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.