தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி + "||" + 620 km in Kerala seeking revocation of Citizenship Amendment Act The long human chain

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
திருவனந்தபுரம்,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களில், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. பின்னர் அந்த போராட்டம் பிற மாநிலங்களுக்கும் பரவி நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை உருவானது.

எனினும் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பா.ஜனதா ஆட்சியில் இல்லாத கேரளா, மேற்குவங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

மேற்கூறிய மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. அதுமட்டும் இன்றி இந்த விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக அந்த மாநிலங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் குடியுரசு தினமான நேற்று கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரமாண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கேரளாவின் இருபகுதி எல்லைகளான வடக்கில் உள்ள காசர்கோடு முதல் தெற்கில் உள்ள களியக்காவிளை வரை 620 கி.மீ. தூரத்துக்கு மக்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கனம் ராஜேந்திரன் ஆகியோர் தலைநகர் திருவனந்தபுரத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 60 முதல் 70 லட்சம் மக்கள் பங்கேற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டம்: எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுகின்றன - சரத்குமார் குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுகின்றன என்று சரத்குமார் கூறினார்.
2. குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்ததுடன், அது இந்தியாவின் விவகாரம் என்றார்.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி செஞ்சியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, செஞ்சியில் முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்: டெல்லியில் வன்முறை - போலீஸ்காரர் பலி ; துப்பாக்கி சூடு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் டெல்லியில் வன்முறை ஏற்பட்டது, இதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானர் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
5. இளையான்குடியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 7-வது நாளாக போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 7-வது நாளாக இளையான்குடியில் போராட்டம் நடந்தது.