மாநில செய்திகள்

திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை + "||" + Murder BJP Regional Secretary in Trichy

திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை

திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை
திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருச்சி: 

திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் விஜயரகு. இன்று காலை காந்தி மார்க்கெட்டில் வைத்து விஜயரகுவை 4 பேர் கொண்ட கும்பல்  வெட்டியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

செல்போன் திருட்டு தொடர்பாக நடந்த மோதலில் விஜயரகு வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு  என்பவரை காந்தி சந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அருகே பெண் துப்புரவு பணியாளர் கல்லால் தாக்கி கொலை
சேலம் அருகே கல்லால் தாக்கி பெண் துப்புரவு பணியாளர் கொலை செய்யப்பட்டார். அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. புதுவை அருகே வாலிபரை கொன்று உடல் எரிப்பு: காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் கைது
புதுவை அருகே வாலிபர் கொலையில் காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் சிக்கினர். நண்பர் மூலம் கொலை திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
3. சேலத்தில், 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக சேலத்தில் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
4. திருச்சி பெண் கொலை வழக்கில் கீழ்கோர்ட்டு தீர்ப்பு ரத்து: டிரைவருக்கு ஆயுள் தண்டனை; கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
திருச்சி பெண் கொலையில் தொடர்புடையவர்களை கீழ்கோர்ட்டு விடுவித்ததை ரத்து செய்து டிரைவருக்கு ஆயுள்தண்டனையும், அவருடைய கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
5. சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.