தேசிய செய்திகள்

நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடம் -பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் + "||" + Prime Minister Modi inaugurates New Metro Line in Nagpur

நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடம் -பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடம் -பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார்.
மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் கடந்த 2014-ம் ஆண்டு மெட்ரோ வழித்தடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இதனை அவர் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட ‘ஆரஞ்ச் லைன்’ என்று அழைக்கப்படும் காப்ரி முதல் சிதாபுட்லி வரையிலான முதற்கட்ட வழித்தடத்தை ஏற்கனவே பிரதமர் மோடி தான் திறந்து வைத்தார்.

‘அக்வா லைன்’ என்று அழைக்கப்படும் இரண்டாம் கட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், அதையும் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த மெட்ரோ பாதை 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நாக்பூரில் லோக்மண்யா நகர் முதல் சீதாபுல்டி வரையுள்ள அனைத்து நிறுத்தங்களிலும் மெட்ரோ ரெயில் நின்று செல்லும்.

நாடு முழுவதும் உள்ள வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் மெட்ரோ வழித்தடங்கள் பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி கடுமையானவர் ; அமெரிக்க அதிபர் டிரம்ப்
வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.
2. இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம்-டொனால்டு டிரம்ப்
இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம் என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கூறினார்.
3. அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர் - மோடிக்கு டொனால்டு டிரம்ப் புகழாரம்
அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர் என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் மோடியை புகழ்ந்தார்.
4. இரு நாட்டு உறவுகளை நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் - பிரதமர் மோடி
சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடக்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி இரு நாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் பிரதமர் மோடி கூறினார்.
5. அகமதாபாத் வந்தடைந்தார் டொனால்டு டிரம்ப்; பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்பு
2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!