தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேல்-சபையை ஒழிக்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேறியது + "||" + AP cabinet passes resolution to abolish Legislative Council: Why this will help Jagan

ஆந்திராவில் மேல்-சபையை ஒழிக்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேறியது

ஆந்திராவில் மேல்-சபையை ஒழிக்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேறியது
ஆந்திராவில் மேல்-சபையை ஒழிக்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமராவதி,

ஆந்திரா மேல்-சபையில் மொத்தம் 58 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்துக்கு 28 பேரும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வெறும் 9 உறுப்பினர்களும் மட்டுமே இருக்கிறார்கள்.


இதனால் ஆந்திர மாநில தலைநகரை 3 நகரங்களில் நிர்மாணிக்க வகை செய்ய அரசு தரப்பில் கொண்டு வந்த 2 மசோதாக்கள் போதிய பலம் இல்லாததால் கடந்த வாரம் தோல்வி அடைந்தது.

6 ஆண்டு பதவிகாலம் முடிவடைந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பிறகு 2021-ம் ஆண்டில்தான், ஆளும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு மேல்-சபையில் பெரும்பான்மை பலம் கிடைக்கும். அதுவரை ஆளும் கட்சி விரும்பும் எந்த முடிவையும் நிறைவேற்ற முடியாத நிலை இருக்கிறது.

இதனால் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மேல்-சபையை ஒழிக்க முடிவு செய்தார். அதன்படி ஆந்திர மேல்-சபையை ஒழிக்கும் தீர்மானம் நேற்று சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. விவாதத்துக்குப்பின் மாலையில் ஓட்டெடுப்பு நடந்தது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கூட்டத்தை புறக்கணித்ததால், அந்த தீர்மானம் 133-0 என்ற கணக்கில் சட்டசபையில் நிறைவேறியது.