மாநில செய்திகள்

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Tamil Nadu good governance awardsTo beat Stalin's speech

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா மற்றும் ஹெலன் சத்யா அவர்களின் திருமணம் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது. திருமண விழாவில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு  மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முன் அனுமதி பெறாமலே அவரை சந்திக்கும் நபர்களில் விக்கிரமராஜாவும் ஒருவராக இருந்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதனை எதிர்க்கின்றன. அதிமுகவும் 12 வாக்குகள் அளித்துள்ளது. இவர்கள் சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மவுனமாக உள்ளது.  மாநில உரிமை பறிபோவதை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை.

அதிமுக நடத்துவது கமிஷன் ஆட்சி. தற்போது இருக்கக் கூடிய ஆட்சி வியாபார ஆட்சி. தமிழகத்துக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும். 

மணமக்கள் மத்திய - மாநில அரசுகள்போல் அமைதியாக இருக்காமல்  கேள்விகள் கேட்க வேண்டும்.

சுயமரியாதை இயக்கம் கண்டு பெண்களுக்கான சம உரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார், இன்று அவரையே விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு, திமுக உடனான நட்பும் தோழமையும் தொடர வேண்டும் என வேண்டிக் கொள்வதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்
சென்னையில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உதவி செய்தார்.
2. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
3. ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணையும் விழா மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை
மதுரையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.
4. மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. கூட்டத்தில், உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
5. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? - மு.க.ஸ்டாலின் டுவிட்
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.