சினிமா செய்திகள்

விமானத்தில் கோளாறு : 2 மணி நேரம் காத்திருந்த ரஜினிகாந்த் பயணிகளுடன் செல்பி + "||" + Technical snag delays Mysore-bound flight; Rajinikanth clicks pictures with passengers

விமானத்தில் கோளாறு : 2 மணி நேரம் காத்திருந்த ரஜினிகாந்த் பயணிகளுடன் செல்பி

விமானத்தில் கோளாறு : 2 மணி நேரம் காத்திருந்த ரஜினிகாந்த் பயணிகளுடன் செல்பி
சென்னையில் இருந்து மைசூர் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் காத்திருந்த ரஜினிகாந்த் பயணிகளுடன் செல்பி எடுத்து கொண்டார்.
சென்னை:

சென்னையில் இருந்து இன்று காலை மைசூருக்கு ஒரு சிறியரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயணிகள் என 48 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது.

தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விமானத்தை அவசரமாக தரையிறக்க பைலட் அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் ரஜினிகாந்த் விமானத்திலேயே  இருந்துள்ளார். காத்திருந்த நேரத்தில் பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த், மைசூருக்கு பயணித்துள்ளார். விமானம் கிளம்புவதற்கு தாமதமானதால், அவருடன் பயணிக்கவிருந்த பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டுள்ளனர். இதையடுத்து அனைவருடனும் இணைந்து ரஜினிகாந்த் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நடசத்திரம் மரணமடைந்தார்
2. அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்
அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது கொரோனா விழிப்புணர்வுப் பாடலில் இணைந்த வைரமுத்து எஸ்.பி. பால சுப்பிரமணியம்
3. திரைப்பட தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி; விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் தலா ரூ.10 லட்சம் வழங்கினர்
திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.
4. எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி -ரஜினிகாந்த்
எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
5. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அவருக்கும் தெரியாது, இறைவனுக்கும் தெரியாது - நடிகர் வடிவேலு
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்.