பட்ஜெட்

கர்நாடக பட்ஜெட் மார்ச் 5-ந் தேதி தாக்கல் - முதல் மந்திரி எடியூரப்பா தகவல் + "||" + Karnataka Budget filed on 5th March - First Minister Yeddyurappa Information

கர்நாடக பட்ஜெட் மார்ச் 5-ந் தேதி தாக்கல் - முதல் மந்திரி எடியூரப்பா தகவல்

கர்நாடக பட்ஜெட் மார்ச் 5-ந் தேதி தாக்கல் - முதல் மந்திரி எடியூரப்பா தகவல்
கர்நாடக பட்ஜெட் மார்ச் மாதம் 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
மைசூரு,

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார் அவர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கே.ஆர்.நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பயங்கரமான சேதம் ஏற்பட்டது. அதனால் ஏராளமான மக்கள் தங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறினர். அவர்களுக்கு மீண்டும் அதே கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். இது உறுதி” இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

அப்போது அவருடன் மந்திரி அசோக், ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. உள்பட பலர் இருந்தனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிப்பு பெட்ரோல், மதுபானம் விலை உயருகிறது - தோட்டக்கலை பயிர்கள் பயிரிட விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை
கர்நாடக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்- மந்திரி எடியூரப்பா நேற்று தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல், டீசல் விலை, மதுபானங்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தோட்டக் கலைத் துறை விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2. பெங்களூருவில் ரூ. 400 கோடி செலவில் 25 மாடியில் புதிய தலைமைச்செயலகம்- கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு
பெங்களூருவில் ரூ. 400 கோடி செலவில் 25 மாடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. கர்நாடக பட்ஜெட் மார்ச் 5-ந் தேதி தாக்கல் முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்
கர்நாடக பட்ஜெட் மார்ச் மாதம் 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.